Pages

  • Twitter
  • Facebook
  • Google+
  • RSS Feed
யிரம் அயல் நாட்டு விஞ்ஞானிகளோ..
இல்லை தற்போதைய அணு விஞ்ஞானிகளோ கூட கண்டுப்பிடிக்காத .!!
கண்டுபிடிக்க முடியாத..!!
அறிவியல் தொழில்நுட்பம் தான்
ஒரு முழ கயிற்றில் பனை மரம், தென்னை மரம் ஏறும் வித்தை..
மனிதன் நடக்கும் போது அவனது முழு எடையும் கால் தாங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்..
ஆனால் ஒரு முழ கயிற்றால் மனிதனின் முழு எடையும் காலில் சமபடுத்த முடியும் என்பதை அறிந்துள்ளான் நமது முன்னோர் தமிழர்கள்
யாராவது தமிழன் என்ன சாதித்தான் என்று கேட்டால்
அவனிடம் ஒரு முழம் கயிறு கொடுத்து அவனை தென்னை மரம் ஏற சொல்லுங்கள்..
அப்போது அவனுக்கு புரியும்..
தமிழனின் பெருமை...
பூண்டு கழிவுகளில் இயற்கை உரம் :
பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்.
வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி தனபால் கூறுகையில், “”பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கிறது,” என்றார்.
மீன் அமிலம் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை :
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பதம் அறிதல் :
நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
பழவாடை அறிதல் :
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை :
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்
பயன்கள் :
பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
வைப்பு :
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
முதுமையை விரட்டும் ஒரு இனிய மருந்து !!!
தேவை:
– 10 பூண்டு பற்கள்
– 10 எலுமிச்சை பழச்சாறு
– 1 கிலோ ஆர்கானிக் தேன்
செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும்.
நன்றாக ஊறியவுடன் தினமும் 1 டீஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றிலும், மாலை உணவுக்கு முன்பும் சாப்பிடவும்.
திபேத்தியர்களின் இந்த ரகசிய கலவை நீண்ட ஆயுளுக்கும், முதுமை அடைவதை தாமதப்படுத்தவும் உதவும் ஒரு அற்புத மருந்து.
பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்- வே மதிமாறன்
பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?
க.சுரேசு, கயத்தாறு.
பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.
திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.
பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.
1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.
மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.
புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.
அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)
ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.

ஓசூர் கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் ஈரோடு மக்கள் கவனத்திற்கு
மத்தூர் பனங்கருப்பட்டி.
கிருட்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பனைமரங்கள் அதிகம்.
மணிவண்ணன் என்ற இளைஞரின் முயற்சியினால் அந்த ஊரே பனைபொருட்கள் உருவாக்கத்தில் வளர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
ஆம். ஒற்றை கை ஓசை தராது என்பதை உணர்ந்து ஒரு ஊரே ஒன்றிணைந்து இடைத்தரகர்களிடம் பொருட்களை வழங்குவதில்லை என முடிவெடுத்து நேரடி விற்பனையில் இறங்கியுள்ளது.
இவ்வாறான ஒன்றுபட்ட வணிகத்தை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை கொண்ட உதவ குழுவின் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருவாளர் சுரேசு (suresh laxmanan) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் அடிப்படையில் தரமான மற்றும் சுவையான பனங்கருப்பட்டிகள் தயாரிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டது.
இதன் பின் "மத்தூர் பனங்கருப்படி" என தனி பெயரை (Brand Name) வழங்கி ஊர் மக்களின் உழைப்பிற்கு ஒரு அங்கீகராத்தை வழங்கியுள்ளோம்.
தற்போது ஒரு கிலோ 150 உருவாய்க்கு (Minimum order 50 Kgs) விற்பனை செய்கின்றனர்.
போக்குவரத்து செலவாக கிலோவிற்கு 4-8 உருவாய் வரை ஆகின்றது.
கடைகளுக்கு நேரடியாக தேவை இருப்பின் தொடர்பு கொள்ளவும். அல்லது 10 நண்பர்கள் இணைந்து 50 கிலோ வாங்கி பயன் பெறலாம்.
தேவைக்கு மணிவண்ணன் # 9945679783.
சேவையில் குறைகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும். # 9944011551.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff